Skip to main content

260 பள்ளிகளுக்கு 260 நிராவி கொதிகலன்கள் முதல் அமைச்சர் அறிவிப்பு

260 பள்ளிகளுக்கு ரூ.12 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 260 நிராவி கொதிகலன்கள் அறிவிப்பு
முதல்-அமைச்சர்  சட்டசபை யில் இன்று 110-வது விதியின்கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-வலுவான பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவை அளிப்பதன் மூலம் சமூக
மற்றும் பொருளாதார நிலையில் நலிவடைந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வில் நிரந்தரமான மாறுதலை ஏற்படுத்த இயலும் என்பதால் எனது தலைமையிலான அரசு, அதற்கான திட்டங்களைத் தீட்டி அவற்றைசெவ்வனே செயல்படுத்தி வருகிறது.


இதன் தொடர்ச்சியாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின மாணவ-மாணவி யரின் கல்வி சார்ந்த திட்டங் களை மேலும் வலுப்படுத்தும் வகையில், நடப்பாண்டில் பின்வரும் அறிவிப்பு களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.ஆதிதிராவிடர் நல விடுதிகள், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர் களுக்கு குறித்த நேரத்தில் உணவு தயாரித்து வழங்கு வதில் உள்ள சிரமத்தினைக்குறைக்கும் வகையில், நடப்பாண்டில், 160 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும், 100 ஆதிதிராவிடர் நல பள்ளி களுக்கும் என மொத்தம் ரூ.12 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 260 நிராவி கொதிகலன்கள் வாங்கி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகள் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப தட்டு மற்றும் டம்ளர்களை பயன்படுத்தி வருகின்றனர். மாணவ-மாணவியரிடம் ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் வளர்க்கும் நோக்கத்தில், 1,314 ஆதி திராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 98,039 மாணவ-மாணவியருக்கு, 1 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வாங்கி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.பணிபுரியும் ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியின மகளிர், தங்கள் பணி காரணமாகஇருப்பிட மாவட்டங்களையும், குடும்பங்களையும் விட்டு பிற மாவட்டங்களுக்குச் சென்று தங்கி பணிபுரியும் போது பாதுகாப்புடனும், கவலையின்றியும், தங்கிப் பணிபுரிவதற்கு ஏதுவாக மகளிர் விடுதிகள் துவங்குவது அவசியமாகும்.எனவே, முதற்கட்டமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோயம்புத் தூர் மற்றும் திருச்சி மாவட்டங் களில் பணிபுரியும் மகளிருக் கான புதிய விடுதிகள் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆதிதிராவிடர்-பழங்குடி யினர் நல உயர்நிலைப் பள்ளி களில் பயிலும் மாணவ- மாணவியர் உயர்கல்வி பயில நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலையைக் கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே மேல்நிலைக் கல்வி பயில்வதற்கும்,விரும்பும் பாடப் பிரிவில் சேர்வதற்கும் ஏதுவாக வரும் கல்வியாண்டில் 5 ஆதிதிராவிடர்-பழங்குடி யினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக ரூ.2 கோடியே 54 லட்சம் செலவில் நிலை உயர்த்தப் படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதே போன்று, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே பள்ளிக் கல்வியை தொடரஏதுவாக வும், இடை நிற்றலை தவிர்க்கும் நோக்குடனும், வரும் கல்வியாண்டில் 15 ஆதிதிராவிடர்/ பழங்குடி யினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக ரூ.2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.சேலம் மாவட்டம் அபினவம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் வெள்ளி மலையில் 2 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதே போன்று, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 32,813 பழங்குடியினர்கள் பயன்பெறும் வகையில் உதக மண்டலத்தில் உள்ள முத்தோரை பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மைய வளாகத்தில், ரூ.2 கோடி செலவில் மாதிரி உண்டி உறைவிடப் பள்ளி ஒன்று தோற்றுவிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில், அறிவுத் திறன் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டதை போன்று பழங்குடியினர் உண்டி உறைவிட, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ரூ.1 கோடியே 31 லட்சம் செலவில் 26 பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த அறிவிப்புகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவியர் கல்வியில் அதிக கவனம் செலுத்தி, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.