Skip to main content

குரூப் - 2 பதவிகளுக்கு 24ம் தேதி கலந்தாய்வு

குரூப் - 2 நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,222 பேருக்கு, வரும், 24ம் தேதி முதல் கலந்தாய்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குரூப் -- 2 நேர்முக தேர்வு பதவிகளில், 1,136 காலியிடங்களை நிரப்ப, முதன்மை எழுத்துத் தேர்வு, 2014 நவ., 8, 9ம் தேதிகளில் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற,
2,222 பேருக்கு, ஜூலை 15ம் தேதி முதல், ஆக., 8ம் தேதி வரை, நேர்காணல் நடந்தது; அதில் தேர்வானவர் விவரங்கள், ஆக., 10ம் தேதி வெளியிடப்பட்டன.

நேர்காணலில் பங்கேற்ற, 2,222 பேரும் கலந்தாய்வில் பங்கேற்க, தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கலந்தாய்வு, ஆக., 24ம் தேதி முதல், செப்., 1ம் தேதி வரை, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில் நடக்கும். எப்போது கலந்தாய்வு என்ற விவரம், அழைப்புக்கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.கடிதம் வராதவர்கள், தேர்வாணைய இணையதளத்தில் கடித நகலை பதிவிறக்கம் செய்து பங்கேற்க வேண்டும். குறிப்பிட்ட தேதியில், வர தவறினால், கலந்தாய்வில் மீண்டும் பங்கேற்க முடியாது.தினமும் கலந்தாய்வு முடிந்தவுடன், காலியிட விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி