Skip to main content

14,500 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம் இடமாறுதல்

அரசு பள்ளிகளில் பணிபுரியும், 14 ஆயிரத்து 500 சிறப்பு ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
15 ஆயிரம் ஆசிரியர்கள்:அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, கைவினை, உடற்கல்வி போன்ற சிறப்பு பாடங்களுக்கு, 4,000
நிரந்தர ஆசிரியர்கள்; 15 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில், சிறப்பு ஆசிரியர்களுக்கு, சிறப்பு தகுதி தேர்வு நடத்தி, அதன்படி பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது.
அதற்கான தேர்வு பாடத்திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதனால், இந்த ஆசிரியர்கள் எப்போது வேண்டுமானாலும், தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, பணி வரன்முறை செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.இருந்தும், தேர்வு நடந்தால், தங்களது பணி பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில், பல சிறப்பு ஆசிரியர்கள் உள்ளனர்.

அனைவருக்கும் கல்வி:இந்நிலையில், சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம், பணியிட மாறுதல் வழங்க, பள்ளிக்கல்வியின் கீழ் இயங்கும், மாநில அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.பணி நிரவலுக்கான ஆசிரியர் பட்டியலை, வரும், 28ம் தேதிக்குள் தயார் செய்து அனுப்ப, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

TN school lab Assistant Official Notification for Chennai

TN school lab Assistant Official Notification for Chennai

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன