Skip to main content

பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான போலீசாரின் ஆன்லைன் விசாரணை


        பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால் வீடு தேடி வந்து போலீசார் விசாரணை நடத்தும் முறையை மாற்றி ஆன்லைன் விசாரணை முறையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான முதல் கட்ட பணி நவம்பரில் தொடங்கும் என தெரிகிறது.

       வெளிநாடு செல்ல விரும்புவோர் மத்திய அரசிடம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா என போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்துவது வழக்கம். இதனால் தேவையில்லாத கால தாமதம் ஏற்படுவதுடன், விண்ணப்பிப்பவர்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன. எனவே இந்த முறையை மாற்றி ஆன் லைன் மூலமாக போலீசார் விசாரணை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான முதல் கட்டமாக பெங்களுர் நகரில் போலீசார் ஆன் லைன் விசாரணை முறையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாவட்ட எஸ்பி அல்லது டிசிபி தரத்திலான காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

         தேசிய மக்கள் தொகை ஆவணம், ஆதார், கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் உள்ளிட்டவற்றை கொண்டு விண்ணப்பதாரரின் குற்ற நடவடிக்கைகள் மற்றும் அவர் மீதான வழக்குகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் சுமார் 14 ஆயிரம் காவல் நிலையங்களில் உள்ள ஆவணங்கள் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படுகின்றன.


இதுகுறித்து உள்துறை அதிகாரி கூறுகையில், கடந்த காலத்தில் போலீசாரின் விசாரணைக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலையில் இந்த முறையின் மூலமாக ஒரு வாரத்திற்குள் அந்த பணியை எளிதில் முடிக்க முடியும் என்று தெரிவித்தார். போலீசாரின் ஆன் லைன் விசாரணை முறை வெற்றி பெற்றால் இந்த திட்டத்தை வேறு சில திட்டங்களுக்கும் நீடிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா