Skip to main content

கலாம் பாடத்துடன் புதிய பி.இ.வகுப்பு துவக்கம் அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகள் ஏற்பாடு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 534 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஆகஸ்ட், 3ம் தேதி, புதிய வகுப்புகள் துவங்க உள்ளன. முதல் நாளில், முன்னாள் ஜனாதிபதியும், அண்ணா பல்கலை முன்னாள் கவுரவ பேராசிரியருமான அப்துல் கலாமுக்கு அஞ்சலி மற்றும்
அவரைப் பற்றி பாடம் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது: இன்ஜினியரிங் கல்லுாரிகளில், புதிய கல்வி ஆண்டு துவங்கும் நிலையில், இன்ஜி., துறையில் எட்ட முடியாத சாதனைகளைச் செய்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்துள்ளார். அண்ணா பல்கலையின், எம்.ஐ.டி., கல்லுாரியில், பி.இ., படித்த அவர், ஜனாதிபதியாகும் முன், அண்ணா பல்கலையில் கவுரவ பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். எனவே, முதல் நாள் வகுப்பில், அப்துல் கலாமுக்கு மவுன அஞ்சலி செலுத்துவதுடன், மாணவர்களுக்கு கலாமின் அறிவியல் வரலாற்று சாதனைகளை பாடமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


மாணவர்களுக்கு உந்துசக்தி கிடைக்கும் விதத்தில், அவரைப்போல் சிறந்த முறையில் படித்து, தாய்நாட்டுக்காக ஆராய்ச்சியில் ஈடுபட மாணவர் உறுதிமொழி எடுத்த பின், வழக்கமான வகுப்புகள் துவங்கும். இவ்வாறு அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விண்வெளி ஆய்வு மையத்துக்கு கலாம் பெயர் சூட்ட கோரிக்கை:நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கூறியதாவது:விண்வெளி ஆய்வில் பல படிகள் பின்தங்கியிருந்த இந்தியா, மற்ற நாடுகளோடு போட்டி போடும் அளவுக்கு உயர்ந்ததில், கலாமுக்கு முக்கிய பங்கும் உண்டு. 

அப்படிப்பட்ட திறமை மிகு மனிதர்; இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிய போது தான், தமிழகத்தின் மகேந்திரகிரியில், விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் உருவாக்கம் மற்றும் சோதனையிடும் பணிகள், இங்கு தான் முழுமையாக நடக்கின்றன. 

ராக்கெட் செயல்பாட்டில் நவீனமாகக் கருதப்படும், 'க்ரையோஜெனிக்' இன்ஜினை அமைக்க பல நாடுகள், சிரமப்பட்டு வரும் போது, கலாமின் சிஷ்யரான சிவன் தலைமையில் செயல்பட்ட விஞ்ஞானிகள் பலரும், மகேந்திரகிரியிலேயே அதைச் செய்து முடித்தனர். 

கிட்டத்தட்ட, 6,000 ஏக்கரில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு, அப்துல் கலாம் நினைவாக, அவரது பெயரை சூட்ட வேண்டும். அவரது கனவுப்படி, ராக்கெட் தொழில் நுட்பத்தை, வருங்கால இளைஞர்களுக்கும் அதிக அளவில் கொண்டு செல்லும் விதமாக, இந்த வளாகத்துக்குள்ளேயே, சிறப்புக் கல்லுாரி ஒன்றையும் அமைக்க வேண்டும்.அதேபோல, அருகில் உள்ள குலசேகரப்பட்டினத்தில், ராக்கெட் ஏவுதளம் ஒன்றை அமைக்க வேண்டும். அதற்கும், கலாம் பெயரை சூட்ட வேண்டும். வரும், 7ம் தேதி, தமிழகம் வரும் பிரதமர் மோடியை, இந்தக் கோரிக்கைகளுடன் சந்திக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு