Skip to main content

ஆசிரியர்களுக்கு பயிற்சி கட்டாயம்:தற்செயல் விடுப்புக்கு அனுமதி மறுப்பு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி நாட்களில் தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி மறுத்து, மாநில திட்ட இயக்குனர் எச்சரித்துள்ளார். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்,
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிகளுக்காக மட்டும், கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.


மேலும், விடுமுறை நாட்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டால், அன்றைய தினத்துக்குபதிலாக, வேறு நாட்களில் ஈடுசெய் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயிற்சிகளில் பங்கேற்க பெரும்பாலான ஆசிரியர்களிடம் ஆர்வம் காணப்படுவதில்லை. சிலர், அன்றைய தினங்களில் விடுப்புஎடுத்துச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இதுகுறித்த புகார்கள் தொடர்ந்து, தலைமை அதிகாரிகளிடம் பதிவு செய்யப்பட்டது. இதனால், பயிற்சி நாட்களில் தற்செயல் விடுப்பு எடுப்பது அரசு விதிகளுக்கு முரணானது எனவும், இனிவரும் காலங்களில் பயிற்சி நாட்களில் தற்செயல் விடுப்பு அளித்தால், அது ரத்து செய்யப்பட்டு, ஆப்சென்ட் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், இதுகுறித்த சுற்றறிக்கை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்,உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா