இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களுக்கு 290 சமையல் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு அடிப்படை ஊதியம் ரூ.900 தர ஊதியம் ரூ.200 வழங்கப்படும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25 சதவீத பணியிடங்கள் உள்ளன.
21 முதல் 40க்குள் இருக்க வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் 20 - 40க்குள் இருக்க வேண்டும்.
பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதோராக இருக்க வேண்டும்.
பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 - 40க்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினரும் 3 கி.மீட்டருக்குள் குடியிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் இலவசமாக பெறலாம்.
விண்ணப்பத்துடன் கல்வி, சாதி, இருப்பிடச் சான்று (2014 டிசம்பர் 31 முன் பெறப்பட்ட ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அட்டை), விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் சான்றுகள் (இருந்தால்) நகல்களை இணைத்து ஜூலை 31க்குள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது