Skip to main content

பணத்தை ரீபண்ட்’ பெற விரும்பினால் ‛ஆன்-லைன்’மூலமே வருமான வரி தாக்கல்


          வருமான வரம்பு ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்டவர்களும், வருமான வரி பிடித்தம் செய்ததை திரும்ப பெற விரும்புபவர்களும் ‛ஆன்-லைன்’ மூலம் மட்டுமே வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும் என வருமான
வரித்துறை அறிவித்துள்ளது.

      இதுகுறித்து, சென்னையில் உள்ள வருமான வரித்துறை
அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வருமான வரித் தாக்கல் வருமானவரி அலுவலகத்தில் நேரடியாகவும், கணினி ‛ஆன்-லைன்’ மூலமும் செலுத்தும் வசதி உள்ளது. எனினும், ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வருமானம் பெறுபவர்கள், வருமானவரி பிடித்தம் செய்ததை திரும்ப பெற விரும்புபவர்கள் (ரீபண்ட்) மற்றும் வியாபாரம், தொழில் மூலம் வருமானம் பெறுபவர்கள் ஆகியோர் ‛ஆன்-லைன்’ மூலம் மட்டுமே வருமானவரித் தாக்கல் செய்ய வேண்டும். 80 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே மேற்கண்ட இந்த விதிகள் பொருந்தும்.

மேலும், வருமான வரி செலுத்துபவர்கள் தங்களுடைய வருமானவரி தாக்கல் செய்வதற்கான அலுவலகங்கள் குறித்து புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள எல்லை குறித்து கண்டறிய www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில் சென்று ‛Know Your Jurisdiction’ என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.


இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்