Skip to main content

எஸ்.எஸ்.சி., தேர்வுகாலக்கெடு நீட்டிப்பு


மத்திய அரசின், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 6,578 பணியிடங்களுக்காக, எஸ்.எஸ்.சி., நடத்தும் தேர்வுக்கு, விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள, 3,523 தபால் உதவியாளர்கள், 2,049 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், 1,006 லோயர் டிவிஷனல்
கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, ஸ்டாப் செலக் ஷன் கமிஷன் - எஸ்.எஸ்.சி., கடந்த மாதம் வெளியிட்டது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 18 முதல் 27 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள், வரும் நவம்பர் மாதம், 1, 15, 22 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளன. விருப்பம் உள்ளவர்கள்,
இணையதளத்தில், ஜூலை, 13க்குள், 'ஆன்-லைன்' முறையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சர்வரில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால், விண்ணப்பித்தலுக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது. தற்போதும், சர்வரில் பிரச்னை இருப்பதால், விண்ணப்பித்தலுக்கான காலக்கெடுவை, ஜூலை 24 ஆக, ஆணையம் நீட்டித்துள்ளது.இதன்படி, 24ம் தேதி மாலை, 5:00 மணி வரை, ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்