Skip to main content

கோவை வேளாண்மைப் பல்கலை.யில் முதுநிலைப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு


கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது.  இப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்
டக்கலை, வேளாண் விரிவாக்கம், மண்ணியல், பூச்சியியல், வேளாண் பொறியியல் உள்ளிட்ட 33 முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 2015-16 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 3-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகி இருந்தது. தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாளான ஜூலை 20-ஆம் தேதி வரையிலும் 1,684 மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர். 

இவர்களில் 540 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கான நுழைவுத் தேர்வு பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வரும் 28-ஆம் தேதி வெளியாகும். இதையடுத்து சேர்க்கை நடைமுறைகள் தொடங்கும்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்