Skip to main content

கல்லூரி ஆசிரியர் பணி நேரத்தை நிர்ணயிக்க...அனுமதி:செயலருக்கு யு.ஜி.சி., கடிதம்.


       அரசு மற்றும் அரசு உதவி பெறும் முதுநிலை கல்லுாரிகளில், ஆசிரியர்களின் பணி நேரம் குறித்து, மாநில உயர்கல்வி துறையே முடிவு செய்து கொள்ளலாம்,” என்று யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது. 

             கர்நாடகாவில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில், 7,000 பேர்,
நிரந்தர ஆசிரியர்கள்; 3,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 16 மணி நேரம்:பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) வழி காட்டுதலின்படி, துணை பேராசிரியர், வாரத்தில் 16 மணி நேரம்; இணை பேராசிரியர்கள், 14 மணி நேரம்; பேராசிரியர்கள், 12 மணி நேரம் பாடம் கற்பிக்க வேண்டும். இருப்பினும், கர்நாடகாவில், இந்த மூன்று பிரிவினரும், வாரந்தோறும், 16 மணி நேரம் பாடம் நடத்தி வருகின்றனர். இந்த பணி நேரத்தை, 22 மணி நேரமாக அதிகரித்து, மாநில உயர் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, 2014 நவம்பரிலேயே வெளியிடப்பட்டது.முதல் நிலை கல்லுாரிகளில், ஆசிரியர்கள், 22 மணி நேரம் பாடம் கற்பிப்பது அவசியம் என்றும் கூறியது.இதற்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சங்க தலைவர் டாக்டர் பிரகாஷ் கூறுகையில், “ஆசிரியர்களின் பணி நேரம் அதிகரிக்கும் போது, பாடம் கற்பிக்கும் தரம் நேரடியாக பாதிக்கப்படும். இதற்கு பதிலாக, ஆசிரியர்களின் திறமையை மதிப்பிடும் முறையை அறிமுகப்படுத்தலாம்,” என்றார்.'யு.ஜி.சி., விதிமுறைப்படி, ஆசிரியர்கள், 16 மணி நேரம் பாடம் கற்பிப்பது போக, ஆறு மணி நேரம் ஆராய்ச்சிகளில் செலவிடலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 'ஆனால், சில ஆசிரியர்கள் மட்டுமே, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு உள்ளதால், மற்ற ஆசிரியர்கள், 16 மணி நேரம் பாடம் நடத்தினால் போதும் என உத்தரவிட வேண்டும்' என்று, யு.ஜி.சி.,க்கு, ஆசிரியர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதினர். குறைவாக...:இதையடுத்து, மாநில உயர்கல்வி துறை முதன்மை செயலர் பரத்லால் மீனாவுக்கு, யு.ஜி.சி., அனுப்பிய கடிதத்தில், 'ஆசிரியர்களின் வேலை நேரம் அதிகரிப்பதோ, குறைப்பதோ மாநில உயர் கல்வி துறையே முடிவு செய்து கொள்ளலாம். 'ஆனால், யு.ஜி.சி., குறிப்பிட்டுள்ள வேலை நேரத்துக்கும் குறைவாக இருக்கக் கூடாது' என்று குறிப்பிட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா