Skip to main content

மருத்துவர்களுக்கு கலாம் படிக்கச் சொன்ன புத்தகம்

பட்டமளிப்பு விழா ஒன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது....அதில் அவர் மருத்துவத் துறையைச் சேர்ந்த அனைத்து மருத்துவர்களும் இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும் என்றார்.
சித்தா, யுனானி, ஆயுர்வேதா, அலோபதி, ஓமியோபதி,
யோகா என பல்வேறு வகையான மருத்துவ முறைகள் உள்ளன. மக்களுக்கு எந்தெந்த நோய்க்கு எந்த வகையான மருத்துவ முறை சிறந்தது என்பது தெரியாததால், அடிக்கடி மருத்துவ முறைகளை மாற்ற வேண்டியுள்ளது. இதனால், பொது மக்களுக்கு அதிகளவில் செலவாகிறது.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம், அனைத்து மருத்துவப் பிரிவுகளின் மருத்துவர்களையும் உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும். அக்குழு எந்தெந்த வகையான நோய்களுக்கு எந்த வகையான மருத்துவ முறை சிறந்தது என்பதை ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் பெரிதும் பயனடைவர்.
காத்மண்டுவைச் சேர்ந்த தலைமை துறவியும், மருத்துவ ஆராய்ச்சியாளருமான சோக்கி நிமா ரிம்போசி, டாக்டர் டேவிட் ஷிலிமுடன் சேர்ந்து, ‘மருத்துவம் மற்றும் கருணை’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது, தாராள குணம், நன்னெறி, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி, ஒருமித்த கவனம், நுண்ணறிவு ஆகிய ஆறு ஒழுக்கப் பண்புகளை கடைபிடிக்க வேண்டும். இப்பண்புகளை மாணவர்கள் உருவாக்கிக் கொள்வர் என நம்புகிறேன். இவ்வாறு 2010-ம் ஆண்டு நடைபெற்ற எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்