Skip to main content

பள்ளி வாகனங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

பள்ளி வாகனங்களில் ஆய்வு நடைபெற்று வரும் இந்த வேளையில், பள்ளி வாகனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்னஎன்பது குறித்து பார்க்கலாம்.தமிழக அரசின் விதிமுறைகள்பள்ளி வாகனங்களுக்கான விதிமுறைகள்
மோட்டார் வாகன விதிப்படியே அனைத்து பள்ளி வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.
உதவியாளர்கள், மாவட்ட குழு, பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி குழு, சிறப்புப்படை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.பள்ளிக்கூட வாகனங்களை வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது.பள்ளிக்கூட வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள், வாகனங்களை ஓட்டுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் இவர்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்துடன் வாகனங்களை ஓட்டக் கூடாது.ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் உதவியாளர்கள் இருக்க வேண்டும். அவர்கள் வாகனத்தில் செல்ல வேண்டும்.பள்ளி வாகனங்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். இவை டெம்போ வேன் போல் அல்லாமல்முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும்.பள்ளி வாகனங்கள் அனைத்திற்கும் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும்.

பள்ளி வாகனத்தின் மேல் பெரிதாக பள்ளியின் பெயர் மற்றும் முத்திரை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே குழந்தைகளை ஏற்றிச்செல்ல வேண்டும்.பள்ளி வாகனங்கள் அனைத்திலும் லாக் புக் பராமரிக்கப்பட வேண்டும்.பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டு அதில் பள்ளி நிர்வாகிகள், கல்வித் துறையினர், போலீசார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோர் இடம் பெறுவார்கள்.இந்த கமிட்டி மாதம்தோறும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும். மாவட்ட அளவிலும் கமிட்டிகள் அமைக்கப்பட்டு பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்.

இந்தக் கமிட்டியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இடம் பெறுவார்கள். இந்த கமிட்டி மாதம் ஒரு முறை கூடி பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்யும்.பெற்றோர் ஆசிரியார் கழகத்தைச் சேர்ந்தவர்களும் மாதம் ஒரு முறை பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி புகார்கள் இருப்பின் பள்ளி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும்.பள்ளி வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு கமிட்டி அமைக்கப்படும்.மண்டல இணை போக்குவரத்து ஆணையர் தலைமையில் இந்த கமிட்டி செயல்படும்.இந்த பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்