Skip to main content

சம்பளத்திற்கு புதிய'சாப்ட்வேர்': ஊழியர் சங்கம் கண்டிப்பு


சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கருவூலத்துறை புதிய 'சாப்ட்வேர்' அறிமுகம் செய்ய உள்ளதால் சம்பளம் பெறுவதில் குளறுபடி ஏற்படும் என சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.சத்துணவு திட்டத்தில், அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 1.44 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு இதுவரை அந்தந்த சம்பளம்
வழங்கும் அதிகாரி ஊழியர்களின் சம்பள பில்லை தயாரித்து, கருவூலத்துறையில் வழங்குவார். அவர்கள் பட்டியல் தயாரித்து வங்கிகள் மூலம் ஊழியர்களின் வங்கி கணக்கிற்கே 'இ.சி.எஸ்.,' -ல் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.ஜூலை 21ம் தேதி கருவூலகத்துறை, அந்தந்த சத்துணவு திட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்த உத்தரவில், சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் புதிய 'சாப்ட்வேர்' பயன்படுத்தப்படும்.
இதில் 'ஆன்லைன்' மூலம் ஊழியரின் வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கும் திட்டம் ஆகஸ்ட் 1ல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.. இதற்காக, சத்துணவு ஊழியர்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, பிறந்த தேதி சான்று, ரேஷன் கார்டு நகல் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த விபரங்களை புதிய சாப்ட்வேரில் ஏற்றிய பின் தான், சம்பளம் கிடைக்கும் என தெரிவித்து விட்டனர். இதனால் ஜூலை சம்பளத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

சங்க மாநில துணை தலைவர் பாண்டி கூறும்போது: 'ஆன்லைனில்' சம்பளம் வழங்குவது வரவேற்கத்தக்க விஷயம். அதே நேரம் இதற்கான ஊழியரின் விபரத்தை சேகரிக்க கால அவகாசம் வழங்க வேண்டும். ஊழியர் விபரம் கம்ப்யூட்டரில் பதிவேற்ற 30 நிமிடமாகிறது. 1.44 லட்சம் ஊழியரின் விபரத்தை உரிய காலத்திற்குள் சேகரிப்பது சிரமம். இதனால் ஜூலை சம்பளம் பெற ஆகஸ்ட் 15 தேதி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும், என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்