Skip to main content

ஓவியம், தையல் பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைப்பு

முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு எதிரொலி : ஓவியம், தையல் பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைப்பு
ஓவியம், தையல் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை
தொடங்கி 3  நாட்களில் பாடத்திட்டம் தயாரிக்க உள்ளது. ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு இதுவரை சரியான பாடத்திட்டம் இல்லை. இது குறித்து மேற்கண்ட பாட ஆசிரியர்கள்  முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தனர்.

அதன் பேரில் மேற்கண்ட பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில  கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் இதற்கான பாடத்திட்டம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு அமைத்துள்ள குழுவில் இசைப் பாடத்துக்கு 5, ஓவியப்பாடத்துக்கு 8, தையல் பாடத்துக்கு 7, உடற்கல்வி பாடத்துக்கு 5 பேர் கொண்டு  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் நாளை முதல் 30ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக்  கல்வியியல் மேலா ண்மை பயி ற்சி நிறுவன ஆய்வுக் கூடத்தில் பாடத்திட் ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்