Skip to main content

மாணவர்களின் உயர்வுக்கு மூன்று யோசனைகள்: நெல்லை சு.முத்து

மாணவர்கள் உயர்வு பெற அன்பு, அறிவு, தேக்கம் இல்லாமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று, பணி நிறைவு பெற்ற இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி நெல்லை சு.முத்து தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில்
,
திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் கபிலர் விழாவின் 3-ஆம் நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

"தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன், நெல்லை சு.முத்துக்கு "கபிலவாணர்' விருதும், "டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா' பொற்கிழி ரூ. ஒரு லட்சமும் வழங்கி சிறப்புரையாற்றினார். விருது பெற்ற நெல்லை சு.முத்து விழாவில் பேசியதாவது:நான் பெற்ற விருதுகளிலேயே மிக உயரிய விருதாக, இந்த விருதைக் கருதுகிறேன். நான் பள்ளிக் கல்வியை தமிழில் படித்தவன். தமிழில் முடியும், தமிழால் முடியும்என்று கருத்துகளை உள்வாங்கி, தமிழில் படித்ததால்தான் நான் வாழ்வில் உயர்ந்துள்ளேன்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உணவு, கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை தேவைப்படுகின்றன. இத்துடன் நாட்டையும் வீட்டையும் பாதுகாக்க வேண்டியதும் மிக அவசியம்.நல்ல உள்ளங்கள், நல்ல அனுபவங்கள் இருந்தால்தான் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். நான் மாணவர்களுக்கு முக்கியமாகக் கூற விரும்புவது, எந்த வேலையையும் நாளைக்கு என்று தள்ளிப் போடக் கூடாது. நாளைய சூரியன் உதிக்காமல்கூட போகலாம். நாளைக்கு என்று ஒரு வேலையை தள்ளிப்போடும்போது அடுத்தநாள் புதிய வேலை வந்து சேர்ந்து விடும். தள்ளிப்போட்ட வேலை, பழைய குப்பையாக மாறி விடும்.திருக்குறளை நான் நன்கு படித்துள்ளேன். அதில் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு கருத்துகள் உள்ளன. ஒரு வேலையைச் செய்யும்போது அன்புடன் செய்ய வேண்டும். 

அதாவது, அந்த வேலை மீது பற்று வைத்துச் செய்ய வேண்டும். அதேபோல அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலையில் தேக்கம் இல்லாத நிலை வேண்டும் என்றார்.விழாவில் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத் தலைவர் தி.எஸ்.தியாகராஜன் வரவேற்றார். செயல் தலைவர் சீநி.பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் கி.மூர்த்தி, பொருளாளர் கா.நடராஜன், துணைத் தலைவர் கா.பி.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட தமிழ் அமைப்புகள், தமிழ்ச் சங்கங்கள், தமிழ் படைப்பாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்