Skip to main content

கலாமை நினைத்து உருகும் ஓவிய ஆசிரியர்: "தொலைபேசி உரையாடல் இன்றும் ஒலிக்கிறது'


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தொலைபேசியில் உரையாடிய திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் கணேசன், இன்றும் தனது செவியில் அந்த உரையாடல் ஒலித்துக் கொண்டிருப்பதாக
உருக்கமுடன் தெரிவித்தார்.
இவர், அப்துல் கலாமின் உருவத்தை பல்வேறு வகையான பொருள்களைக் கொண்டு 32 ஓவியங்களாகப் படைத்தவர்.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை கிராமத்தைச் சேர்ந்தவர் எம். கணேசன் (39). பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணிபுரியும் இவர், சேலத்தில் 2010ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய அறிவியல் கண்காட்சியில் அப்துல் கலாமின்  ஓவியத்தை வரைந்தார். பார்வையாளர்கள் அனைவரும் இந்த ஓவியத்துக்கே அதிக முக்கியத்துவம் அளித்து பார்வையிட்டதால், அப்துல் கலாம் உருவத்தை பல்வேறு பொருள்களைப் பயன்படுத்தி வரையத் தொடங்கினார். தீக்குச்சி, நூல், ஐஸ் குச்சி,  வளையல்கள், உடைந்த கண்ணாடிப் பொருள்கள், பாசிமணிகள் என பல்வேறு பொருள்களைக் கொண்டும் பல வண்ணங்களில் ஓவியம் வரைந்துள்ளார். இதுவரை 32 ஓவியங்களை வரைந்துள்ளார். இந்த ஓவியங்களை இவரது நண்பர் ஒருவர் அப்துல் கலாமின் இணையதள முகவரிக்கு அனுப்பியவுடன் கலாமிடம் இருந்து அழைப்பு வந்தது.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி கணேசனை, செல்லிடப்பேசியில் கலாமே தொடர்புகொண்டு பேசி பாராட்டு தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது ரூ.10 ஆயிரத்துக்கான பரிசுத் தொகையையும் அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்வை இப்போதும் நினைத்து உருகும் ஓவிய ஆசிரியர் கணேசன் கூறியது: கலாம் பேசுகிறார் என்றபோது என்னால் நம்பமுடியவில்லை. அவரிடம் எந்த மொழியில் உரையாடுவது என்ற ஐயமும் இருந்தது. ஆனால், அழகுத் தமிழில் அவரே பேசினார். சொந்த கிராமத்துப் பெயரான பத்தமடை எனக் கூறியதும் பத்தமடை பாய் பிரபலம் என்பதைக் குறிப்பிட்டார். எனது கிராமம், குடும்பம், தொழில், ஓவியத்துக்கான செலவு ஆகியவற்றை 7 நிமிடங்கள் கேட்டறிந்தார். எதற்காக என்னை முன்னிலைப்படுத்தியுள்ளாய் எனவும் கேட்டார். மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தங்களை தீட்டுவதன் மூலம் மாணவ சமுதாயத்துக்கு என்னால் ஆன சிறு உதவியை அளித்த திருப்தி உள்ளது என்றேன். திருநெல்வேலி வரும்போது சந்திப்பதாகக் கூறினார். ஆனால், அந்த வாய்ப்பு கிடைக்கும் முன்பே அவரை தவற விட்டுவிட்டேன் என கண்ணீர் சிந்தினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு