Skip to main content

அரசு பள்ளி துப்புரவு பணியாளர்களுக்குஇம்மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல்


அரசு பள்ளிகளில் பணியாற்றும் 2,000 துப்புரவு பணியாளர்களுக்கு இம்மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாதம் ரூ.3,000 சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் 2012 நவம்பரில்
துப்புரவாளர்கள் என்ற பெயரில் துப்புரவு பணியாளர்கள் 2,000 பேர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசாணை வெளியிடப்படும். இந்நிலையில் இம்மாதம் ஊதியம் பெறுவது குறித்து நேற்றுவரை எந்த உத்தரவும் இல்லை.


அப்பணியாளர்கள் கூறுகையில்,“எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும் என்றாலும் அரசு வேலை என்பதால் பெரும்பாலும் டிகிரி முடித்தவர்களே இதில் உள்ளனர். இன்றைய பொருளாதார சூழ்நிலையில் மாத ஊதியம் ரூ.3,000 என்பது மிக மிக குறைவு. குடும்பத்தினருடன் கஷ்டப்பட்டு வருகிறோம். அரசாணை எதுவும் வராததால் இம்மாத ஊதியம் அடுத்த மாத துவக்கத்தில் எங்களுக்கு கிடைக்குமா என்ற கலக்கத்தில் உள்ளோம். 

மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கேட்டால் சென்னை பள்ளிக்கல்வித்துறையில் முறையிட கூறுகின்றனர். எங்களது மாத ஊதியத்தை உயர்த்தி அது முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்