Skip to main content

விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன்சிலிங்' தேதி அறிவிப்பு திடீரென தள்ளிவைப்பு

ஆசிரியர் இடமாறுதல் விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன்சிலிங்' தேதி அறிவிப்பு திடீரென தள்ளிவைப்பு
இடமாறுதல், 'கவுன்சிலிங்' விதிமுறை களுக்கு, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், கவுன்சிலிங் தேதி அறிவிப்பது, திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு
ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.


இந்த முறை, கவுன்சிலிங் குறித்து, தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால், பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சார்பில், தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, கவுன்சிலிங்குக்கான புதிய விதிமுறைகளை, 10 நாட்களுக்கு முன், தமிழக அரசு வெளியிட்டது. அதில், 'ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்; அதற்கு முன் நிர்வாக நலன் அடிப்படையில் மட்டுமே இடமாற்றம் நடக்கும்' என, தெரிவிக்கப்பட்டது. 'இந்த விதிமுறைகள் ஊழலுக்கு வழிவகுக்கும்' என, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.'விதிமுறைகளை மாற்ற வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பின. சில சங்கங்கள் சார்பில், போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், கவுன்சிலிங் விதிமுறைகளில், சில மாற்றங்கள் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவுன்சிலிங்குறித்த தேதி அறிவிப்பு, நேற்று வெளியாக இருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு திடீரென தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.கவுன்சிலிங் விதிமுறைகளில், மாற்றங்கள் இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். பள்ளிகளின் காலியிட விவரங்கள் இன்னும் முழுமையாக சேகரிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் மேல்,ஒரே இடத்தில் பணிபுரிவோருக்கு, கட்டாய மாறுதல் இருக்காது என்ற விதி இடம் பெற வாய்ப்புள்ளது கல்வித்துறை அதிகாரிகள்..

ஆதிதிராவிடர் பள்ளி பொதுமாறுதல்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்;முதுகலை பட்டதாரி ஆசிரியர்; கணினி ஆசிரியர்; உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு, இந்த கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கவுன்சிலிங், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. அதேபோல, பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடை நிலை ஆசிரியர், உயர் கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங், வரும், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. அந்தந்தமாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்திடம், இடமாறுதல் கோரி, 'ஆன் -லைன்' மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டும், கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்