Skip to main content

நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை: தமிழக அரசு புதிய உத்தரவு

நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், நீச்சல் குளங்களுக்குச் செல்வோரிடம் இதய நோய்உள்ளிட்டவை இல்லை என்பதற்கான சுயசான்றினைப் பெற வேண்
டுமெனவும் தெரிவித்துள்ளது.நீச்சல் குளங்களை கண்காணிக்கவும்,
முறைப்படுத்தவும் தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவுகள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

அவற்றின் விவரம்:

நீச்சல் குளம் தொடங்குவதற்கு முன்பாக அதற்கான முறையான அனுமதிகளைப் பெற வேண்டும். நீச்சல் குளம் தொடங்கவுள்ள இடம் தொடர்பாக பொதுப் பணித் துறையிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும். இந்தச் சான்றினை இணைத்து மாநகராட்சி-நகராட்சி ஆணையாளர் அல்லது பேரூராட்சி நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.நீச்சல் குளத்தை கட்டி முடித்து, அதைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, மற்றொரு தடையின்மைச் சான்றினை ஆறு பேர் கொண்ட குழுவிடம் இருந்து பெற வேண்டும். சென்னையில் நகர காவல் ஆணையாளரும், மாவட்டங்களில் ஆட்சியரும் இந்தக் குழுவின் தலைவராக இருப்பர்.ஏற்கெனவே நீச்சல் குளங்களை வைத்திருப்பவர்கள் இப்போது வரையறுக்கப்பட்ட விதிகளை இரண்டு மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும். அடுத்த ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி - நகராட்சி ஆணையாளர்கள் அந்தக் குளத்தை ஆய்வு செய்து சான்றினை அளிக்க வேண்டும். 

இல்லாவிட்டால் அந்த நீச்சல் குளத்தை பயன்படுத்த முடியாது.8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள்: உயிர் காக்கும் அம்சங்கள் குறித்தும், சுகாதார விதிகள் பற்றியும் நீச்சல் குளத்தின் அறிவிப்புப் பலகையில் குறிப்பிட வேண்டும். தீயணைப்புக் கருவிகளை பொருத்த வேண்டும்.பெண்களுக்கு பாலியியல் தொல்லை கொடுக்க அனுமதிக்கக் கூடாது. புதிதாக நீச்சல் பழகுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு சிவப்புத் தொப்பி அளிக்க வேண்டும். அவசர கால உதவி எண்களை அனைவரும் பார்க்கும்படி வைக்க வேண்டும்.பள்ளிகளில் நீச்சல் குளங்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் இரவு 9 மணிவரை பயன்படுத்தலாம்.

நீச்சல் குளங்களை 8 வயது உள்பட்ட மற்றும் 121.6 சென்டி மீட்டர் உயரத்துக்கு குறைவாக இருக்கும் குழந்தைகள் தனியாக பயன்படுத்தக் கூடாது. பெற்றோர்கள் கண்காணிப்பில் அவர்களை அனுமதிக்கலாம். பள்ளிகளில் பெற்றோர்கள்அல்லது பாதுகாவலர்கள் ஒப்புதலுடன் நீச்சல் குளத்தில் குழந்தைகளை அனுமதிக்கலாம்.இதய நோய், தோல் நோய் போன்றவை இல்லை என்பதற்கான சுயசான்றினை நீச்சல் குளத்தை பயன்படுத்த விரும்புவோரிடம் இருந்தும், கல்வி நிலையங்களில் என்றால், மருத்துவரிடம் இருந்தும் சான்றினைப் பெற வேண்டும்.நீச்சல் செய்யும் போது அதற்கான உடையை அணியாதோர், குடி போதையில் இருப்போர்,சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்போரை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு