Skip to main content

70 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் முகாம் பள்ளிகளில் நடத்த கல்வித்துறை ஏற்பாடு


தமிதமிழகம் முழுவதும், அனைத்து வகை அரசுத் திட்டங்களுக்கும், ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. பள்ளிகளில் மாணவ, மாணவியரின் கல்வி உதவித் தொகை மற்றும் இலவசத் திட்ட முறைகேடுகளைத் தடுக்க, ஆதார் எண்களை
இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஆதார் எண் இணைப்புத் திட்ட தொடர்பு அதிகாரியாக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நியமிக்கப்பட்டு
உள்ளார். அவரது உத்தரவின்படி, மாணவ, மாணவியரின் ஆதார் எண் விவரங்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.


இவற்றில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் எண் இல்லை என, தெரியவந்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும், 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஆதார் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.இந்த மாணவர்களுக்கு, ஆகஸ்ட் மாதத்துக்குள் ஆதார் எண் உருவாக்கும் வகையில், சிறப்பு முகாம் நடத்த, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக பெங்களூரிலுள்ள ஆதார் எண் திட்ட உதவி இயக்குனரகத்துடன், தமிழக பள்ளிக்கல்வித்துறை இணைந்து, முதற்கட்டப் பணிகளை துவங்கியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்