ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.,1 அல்லது 2ம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு கலந்தாய்வு நிபந்தனை தொடர்பாக ஆசிரியர்
களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'ஒரு பள்ளியில் மூன்று கல்வியாண்டு பணியாற்றியிருக்க வேண்டும்' என்ற அந்த நிபந்தனையை ரத்து செய்ய ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து துறை செயலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவு குறித்து அவர் பரிசீலனை செய்வார் என கண்ணப்பன் தெரிவித்தார்.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி