Skip to main content

'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்': ஜூலையில் துவக்கம்


தொழிலாளர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் குறைகளை தீர்க்க 'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் திட்டம்' மதுரை மண்டல அலுவலகத்தில் ஜூலை முதல் துவக்கப்படுகிறது.தொழிலாளர் குறைகளை தீர்க்க வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 'பவிஷ்ய நிதி அதாலத்' நடத்தப்பட்டது. நிறுவனத்தில் தொழில்
நிறுவன உரிமையாளர்களும் முக்கிய பங்கீட்டாளர்களாக உள்ளனர். தொழிலாளர் மட்டுமின்றி உரிமையாளர்களின் குறைகளை தீர்க்க ஏதுவாக, மத்திய வருங்கால வைப்பு நிதி கமிஷனர், பவிஷ்ய நிதி அதாலத்தை 'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் திட்டம்' என பெயர் மாற்றம் செய்துள்ளார்.
இதில் தொழிலாளர்கள்,முதலாளிகள் குறைகளுடன் கருத்துக்களை தெரிவிக்கலாம். மதுரை மண்டல அலுவலகத்தில் 2015 ஜூலை முதல் இத்திட்டம் துவக்கப்படுகிறது. மாதம்தோறும் 10ம் தேதியில் (அன்று விடுமுறை என்றால் மறுநாள்) முகாம் நடக்கும். அன்று காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை தொழிலாளர்கள்; மதியம் 3 முதல் மாலை 4 மணி வரை முதலாளிகள்; மாலை 4 முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கலாம். தொழிலாளர்கள், முதலாளிகள் கருத்துக்களை மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் தெரிவிக்கலாம்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்