Skip to main content

ஐந்தாண்டு சட்டப்படிப்புகவுன்சிலிங் துவக்கம்


தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையில், ஐந்தாண்டு, 'ஹானர்ஸ்' படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. முதல் நாளில், 150 பேர் சேர்ந்தனர்.ஐந்து ஆண்டு, 'ஹானர்ஸ்' படிப்பில், பி.ஏ., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., - பி.காம்., ஆகியவற்றுடன் எல்.எல்.பி., படிக்க, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதே போல், அரசு சட்டக் கல்லுா
ரிகளின் ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்புக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.ஏழு அரசு சட்டக் கல்லுாரிகளில், ஐந்தாண்டு பட்டப்படிப்பில், 1,052 இடங்களுக்கு, 4,500 பேர் விண்ணப்பம் வாங்கியுள்ளனர். பல்கலை வளாகத்தில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில், 'ஹானர்ஸ்' படிக்க, 2,500 பேர் விண்ணப்பித்தனர்.



இவர்களில், 'ஹானர்ஸ்' படிப்புக்கு மட்டும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இன வாரியாக தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு, 431 பேர் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பட்டியலும் அறிவிக்கப் பட்டது.தேர்வானவர்களுக்கான கவுன்சிலிங், பல்கலை வளாகத்தில் நேற்று துவங்கியது. முதல் நாளில், 150 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக கல்லுாரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ளவர்களுக்கு இன்றும், நாளையும் கவுன்சிலிங் நடக்க உள்ளது. 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்