Skip to main content

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு அதிகாரம்


தமிழகத்தில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய இடைநிலைச் சான்றிதழ் கல்வி அமைப்பான - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்த, பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆய்வு:இதன்படி, அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்த, 105
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விரைவில் ஆய்வு நடக்கிறது.தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ், அரசு பள்ளிகள், மெட்ரிக், தொடக்கக் கல்வி, ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடப் பள்ளிகள் என, பல பிரிவுகள் உள்ளன. ஆனால், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை கண்காணிக்க தமிழக கல்வித்துறையில் தனியாக ஒரு பிரிவு இல்லை.

அனுமதி:தாங்கள் மத்திய அரசின் அனுமதி பெற்றுள்ளதால், தமிழக கல்வித்துறை கண்காணிக்க முடி யாது என்று, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கூறி வந்தன. ஆனால், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கான அனுமதி மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது.பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு, பாதுகாப்பு, கல்விக் கட்டணம் போன்ற வற்றை, மாநில அரசே கண்காணிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், தனியார் சுயநிதிப் பள்ளிகளின் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும், நீதிபதி சிங்காரவேலு கமிட்டி, இதுகுறித்து விசாரித்து, அனைத்து சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளின் அங்கீகாரம் அளிக்கும் அதிகாரத்தை, பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது.

'நோட்டீஸ்':இதனால், அங்கீகாரம் பெறாத சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது. 105 பள்ளிகள் அங்கீகாரம் கோரி, பள்ளிக் கல்வித்துறையிடம் விண்ணப்பித்துள்ளன. இந்த விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள் குறித்து, கல்வி அதிகாரி கள் மூலம், பள்ளிகளில் நேரடி ஆய்வு செய்து, அனுமதி வழங்குவது குறித்து கல்வித்துறை முடிவு செய்ய உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா