Skip to main content

சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தம்


சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சங்கத்தின் மாவட்ட ஆண்டு பேரவைக் கூட்டம் கா
ஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சாரங்கன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள்:
சத்துணவு ஓய்வூதியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. மேலும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஒட்டுமொத்தத் தொகை, சிறப்பு சேமநிதி ஆண்டுக்கணக்கில் வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத் தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும். 2006-க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தில் தர ஊதியத்தையும் இணைத்து குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2