Skip to main content

சி.பி.எஸ்.இ நுழைவு தேர்வு நடத்த கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சி.பி.எஸ்.இ நுழைவு தேர்வு நடத்த கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுமத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் மருத்துவ நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 5–ந்தேதி நடந்தது. இதில் நாடெங்கும் 6½ லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகவும், கேள்வி
த்தாளும் அதற்கான பதில்களும் முன் கூட்டியே வெளியானதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால் தேர்வை ரத்து செய்வதாகவும் 4 வாரத்துக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்வு நடத்த கால அவகாசம் வழங்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள் ஆகஸ்ட் மாதம் 17–ந்தேதிக்குள் தேர்வை நடத்தி முடித்து முடிவுகளை வெளியிட கால அவகாசம் வழங்கி தீர்ப்பளித்தனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்