Skip to main content

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு:

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 23 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்துச் சாதனை
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.
சென்னை,  கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக இயக்குநர் அலுவலகத்தில், பொறியியல் படிப்புகளில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2015-16 பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 6-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன. மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 515 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 பேர் மட்டுமே சமர்ப்பித்தனர். இவர்களில் மாணவர்கள் 95,300 பேர், மாணவிகள் 58,938 பேர் ஆவர்.
விண்ணப்பித்தவர்களில், 23 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தரவரிசைப் பட்டியலில் கோவையைச் சேர்ந்த கீர்த்திபாலன் என்ற மாணவி முதலிடத்தை பெற்றுள்ளார்.
தரவரிசைப் பட்டியலை www.annauniv.edu என்ற இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2