Skip to main content

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.
இப்பணிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். 2015 ஜூலை 1ஆம் தேதி
யன்று 18 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையலர் பணியில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பத்துக்கென தனிப் படிவம் கிடையாது.
  எழுத்து மூலமாக தரப்படும் விண்ணப்பத்துடன், தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை என்ற முகவரிக்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2