Skip to main content

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் சேர, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின்
கீழ் இயங்கி வரும் விடுதிகளில், நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இந்த விடுதிகளில் சேர விரும்பும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்டோர், இதர வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த விடுதிகளில் சேர, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் வசிக்கும் இடத்துக்கும், விடுதிக்கும் இடையே 5 கி.மீ. தொலைவு இருக்க வேண்டும் (இது மாணவிகளுக்குப் பொருந்தாது). மேலும், இந்த விடுதிகளில் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
தகுதியான மாணவ, மாணவிகள் விடுதிக் காப்பாளரை அணுகி விண்ணப்பத்தைப் பெற்று ஜூலை 7-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். கல்லூரி விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15-ஆம் தேதிக்குள் காப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா