சென்னையில் இன்று துவங்கும் மெட்ரோ ரயில் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம்; ரூ. 40 , குறைந்தது ரூ. 10 . கட்டண விவரம் வருமாறு: ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை
ரூ. 40. ஆலந்தூர் முதல் அரும்பாக்கம் வரை ரூ. 30 , ஆலந்தூர் முதல் - அசோக் நகர் வரை ரூ. 20 , ஆலந்தூர் முதல்-வட பழநி வரை ரூ. 30 , ஆலந்தூர் முதல் ஈக்காட்டுத்தாங்கல் வரை ரூ. 10. சிறப்பு வகுப்பு கட்டணம் சாதாரணத்தில் இருந்து 2 மடங்காக வசூலிக்கப்படும். இலவச பயணம் இந்த ரயிலில் கிடையாது. இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி