Skip to main content

அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி


குழந்தைகள் தினத்தையொட்டி, இந்திய அஞ்சல் துறை சார்பில் "மழையில் ஒருநாள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி நடைபெற உள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:-
அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படவுள்ள இந்தப்போட்டியில்
18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். போட்டிக்கு அனுப்பப்படும் வடிவமைப்புகள் மை, வாட்டர் கலர், ஆயில் கலர் அல்லது மற்ற வடிவமைப்பு முறைகளில் இருக்கலாம். போட்டியில் பங்கேற்போர் ஏ4 அளவில் உள்ள வரையும் தாள், ஆர்ட் பேப்பர் உள்பட அனைத்து வகையான வெள்ளைத் தாளையும் பயன்படுத்தலாம்.


கணினி முறையில் (Compuetr print, print out) அச்சிடப்பட்ட வடிவமைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அஞ்சல் அட்டை சேகரிப்பவரின் விருப்பத்துக்கேற்ப அஞ்சல் அட்டையில் அச்சிடப்படும் வகையில் இந்த வடிவமைப்பு இருக்க வேண்டும். 

போட்டிக்கு அனுப்பப்படும் வடிவமைப்பின் பின்புறம் பங்கேற்பாளரின் பெயர், வயது, இடம், அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் கூடிய முழு முகவரி, தொலைபேசி, செல்லிடப்பேசி, மின் அஞ்சல் முகவரி தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மேலும் வடிவமைப்பு எனக்குச் சொந்தமானது, இதனால் எந்த வகையான பிரச்னையும் வராது என உறுதியளிக்க வேண்டும்.

வடிவமைப்பு எந்த மடிப்பும் இன்றி ஏ4 அஞ்சல் உறையில் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதில் "குழந்தைகள் தினம் 2015- அஞ்சல் தலை வடிவமைப்புப் போட்டி' என்று குறிப்பிடப்பட வேண்டும். 
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வடிவமைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாவது பரிசாக ரூ.6,000, மூன்றாவது பரிசாக ரூ.4,000 வழங்கப்படும். 
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் "கூடுதல் தலைமை இயக்குநர் (அஞ்சல் சேகரிப்பு) அறை எண் 108 (பி), டாக் பவன், நாடாளுமன்ற தெரு, புதுதில்லி-110001' என்ற முகவரிக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அஞ்சல் தலை வடிவமைப்புகளை அனுப்பலாம். மேலும் தகவல் பெற www.indiapost.gov.in என்ற இணையதளத்தைக் காணலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா