Skip to main content

இணையதள வழியில் ஐ.டி.ஐ. தேர்வுகள்: மத்திய அரசு திட்டம்


Image result for iti photosதனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) ஆண்டுத் தேர்வுகளை இணையதள வழியில் நடத்த மத்திய அரசின் தொழில் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
 மத்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிற்பயிற்சிகள் இயக்குநரகத்தின் தலைவர்
டி.மாலிக் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கைவினைஞர் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ளும் வேலைவாய்ப்பு, பயிற்சிகள் துறை இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
 அகில இந்திய அளவிலான தொழிற்பயிற்சித் தேர்வுகள் இப்போது மத்திய அரசின் என்.சி.வி.டி. நிறுவனத்தின் மேற்பார்வையில் இணையவழி அல்லாத முறையில் நேரடியாக நடத்தப்படுகிறது.

 இந்தத் தேர்வு முறை நடத்த அதிக கால அளவு மேற்கொள்ளப்படுகிறது. இதனால், முடிவுகளை வெளியிட குறைந்தது 50 நாள்களுக்கு மேலாகிறது. இந்தத் தேர்வுகளில் மனிதக் குறுக்கீடுகளால் பிழைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஏற்படும் சிறிய தவறுகளால் கேள்வித்தாள்கள் வெளியாகும் நிலையும் ஏற்படுகின்றன.
 இந்தப் பழைய முறையிலான தேர்வு முறையில் ஏற்படும் பிரச்னைகளைக் களைய தொழிற்பயிற்சித் துறையின் ஆண்டுத் தேர்வுகளை ஜனவரி 2016 முதல் இணையதள வழிக் கணிணி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மிக குறுகிய காலத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட இயலும்.
 எனவே, இந்த இணையதள வழிக் கணினிகளால் பருவத் தேர்வுகளை ஜனவரி 2016 முதல் நடத்துவதால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களை விரிவாக எடுத்துரைத்து அறிக்கைகளை ஜூன் 26-க்குள் புதுதில்லியில் உள்ள தொழிற்பயிற்சிகள் துறை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
 இந்த அறிக்கையில் இணையதள வழித் தேர்வு எழுதத் தகுதியானவர்களாக தங்களது மாநிலத்தில் தொழிற்பயிற்சி மையங்களில் மாணவர்கள் உள்ளனரா எனக் குறிப்பிட வேண்டும்.
 இதுதவிர, தங்களது மாநிலத்தில் இணையதள வழித் தேர்வுகள் நடத்த அனுகூலமான சூழ்நிலை உள்ளதா, இருக்கிறது எனில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதா, இணைய தள வழித் தேர்வுகள் நடத்த உள்கட்டமைப்பு வசதிகள் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ளதா அல்லது வேறு ஏதாவது பயிற்சி நிலையங்களில் இணையதளத் தேர்வுகள் நடத்த வசதிகள் உள்ளதா என்பன குறித்த விவரங்களுடன் விரிவான அறிக்கையை அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்