Skip to main content

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்று முடிகிறது.மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகள் தவிர தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில்,
மொத்த இடங்களில் 25 சதவீதத்தை 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்க வேண்டும்.

இந்நிலையில் இலவச இடங்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிக்கக் கோரி சமூக ஆர்வலர் 'பாடம்' நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து இலவச இட விவரங்களை இணைய தளத்தில் வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் டttணீ:/tணட்ச்tணூடிஞிண்ஞிடணிணிடூண்.ஞிணிட்/ இணையதளத்தில் இலவச இடங்களின் எண்ணிக்கை மாவட்டம் மற்றும் பள்ளி வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.


இதில் 32 மாவட்டங்களிலுள்ள 3,720 பள்ளிகள் இடம் பெற்றன. சென்னையில் 371 தொடக்கப் பள்ளிகளில் 11,130 இடங்களில் 2,903 இடங்களில் இலவச சேர்க்கை ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை இலவசமாக பெறலாம். அதை உரிய ஆவணங்களுடன் நிரப்பிக் கொடுத்து ஒப்புகைச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.'பள்ளிகள் தவிர மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகியவற்றிலும் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து தரலாம்' என மெட்ரிக்இயக்குனரகம் அறிவித்துள்ளது.விண்ணப்பப் பரிசீலனை விண்ணப்பத் தேர்வு குலுக்கல் மற்றும் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதியை மெட்ரிக் இயக்குனரகம் ஓரிரு நாளில் அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்