Skip to main content

கவுன்சிலிங் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம்.

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளுக்கு நாளை (23ம் தேதி) கவுன்சிலிங் துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. பொறியியல் படிப்புகளுக்கு விரைவில் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட உள்ளது. எதிர் கால கனவுகளுடன் கவுன்சிலிங் அறையில்
நுழையும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் குறித்து நிறைய சந்தேகங்கள் தோன்றும்.

எனவே, அவர்களின் சந்தே ககங்களை தீர்க்க, கவுன்சிலிங் நடை முறைகள் குறித்து சென்டாக் அதிகாரிகளின் விளக்கம்:
கால் லெட்டர் வரவில்லை. கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியுமா?
சென்டாக் இணைய தளத்தில் கவுன்சிலிங் அழைப்பு கடிதத்தை டவுண்லோடு செய்து கொள்ளலாம். கால் லெட்டர் வர வில்லையெனில், கவுன்சிலிங் நடக்கும் குறிப்பிட்ட தேதியில், நேரத்தில் கலந்து கொள்ளலாம்.
கவுன்சிலிங் வரும் போது எந்தெந்த சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும்?
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஒருங்கிணைந்த ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஒரிஜனல் சான்றிதழ்களையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும். அனைத்து சான்றிதழ்களின் நகல்களை ஒரு செட் எடுத்து வர வேண்டும்.
கவுன்சிலிங் கட்டணம் எவ்வளவு?
பொது பிரிவு உட்பட ஏனைய பிரிவினர் 850 ரூபாய்க்கு, கன்வீனர், சென்டாக் என்ற முகவரியில் புதுச்சேரியில் மாற்றத் தக்க வகையில் டி.டி., எடுத்து வர வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் 350 ரூபாய்க்கு எடுத்தால் போதும். டி.டி.,இல்லாமல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியாது.
கவுன்சிலிங்கிற்கு வந்துவிட்டு, எந்த கல்லுாரியையும் தேர்வு செய்ய விருப்பமில்லை என்றால் கவுன்சிலிங் கட்டணம் திரும்ப கிடைக்குமா?
முதற்கட்ட கவுன்சிலிங் எந்த கல்லுாரியிலும் இடங்களை தேர்வு செய்யவில்லை என்றால் டி.டி.,கட்டணம் திரும்பி அளிக்கப்படும். அதன் பிறகு நடக்கும் கவுன்சிலிங் பங்கேற்றால் கவுன்சிலிங் கட்டணம் திரும்பி கிடைக்காது.
கவுன்சிலிங்கிற்கு பெற்றோர் இல்லாமல் கலந்து கொள்ள முடியுமா?
கவுன்சிலிங்கில் மாணவர் மட்டும் தனியாக சீட் எடுக்க முடியாது. தாய், தந்தை அல்லது சட்டபடியான பாதுகாவலரை உடன் அழைத்து வர வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக கவுன்சிலிங் மாணவர் பங்கேற்க முடியாவிட்டால்....
அதற்கு அடுத்த நாட்களில் அந்த மாணவர் கவுன்சிலிங்கிற்கு வரலாம். அதே சமயம் ஏற்கனவே இருந்த காலியிடங்களை குறிப்பிட்டு உரிமை கோர முடியாது. கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் நேரத்தில் உள்ள காலி இடங்களில் இருப்பதில் விருப்பமானத்தை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர்.
மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வந்துள்ளது, ரேங்க் பட்டியலில் மாற்றம் செய்ய கொடுக்கலமா?
நிச்சயமாக கொடுக்கலாம். அதற்குகேற்ப தரவரிசை பட்டியல் மாறும். மறு மதிப்பீட்டு மதிப்பெண் சான்றிதழை சென்டாக் அலுவலத்தில் சமர்பித்து, அந்த கட் ஆப் மதிப்பெண் ஏற்றவாறு கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.
கவுன்சிலிங் காலி இட நிலவரங்களை தெரிந்து கொள்வது எப்படி?
கவுன்சிலிங்கின் போது எந்த கல்லுாரியில் எந்த படிப்புகளில் இடங்கள் காலியாக உள்ளன என்ற விபரங்கள் சென்டாக் இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும்.
ஒவ்வொரு நாளும் இரவில் கவுன்சிலிங் முடிவிலும் காலியிட நிலவரம் புதுப்பிக்கப்படும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்புகளில் இடம் இருக்கிறதா என இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சென்டாக் இணையதளம்: www.centacprof.net.in

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன