Skip to main content

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பழைய மாணவர்கள் 520 பேருக்கு வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் கட் ஆஃப்பில் முன்னிலையில்வந்துள்ள பழைய மாணவர்கள் 520 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் 2,655 எம்பிபிஎ
ஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 398 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 2,257 இடங்கள் மாநில அரசுக்கு இருக்கின்றன.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள்ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவை தவிர8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 833 எம்பிபிஎஸ்இடங்கள் மற்றும் 19 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 1,020 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில், 2015 - 2016-ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்காக 31,525 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

விண்ணப்பித்தவர்களில் 26,846 மாணவர்கள் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். பழைய மாணவர்கள் 4,679 பேர் ஆகும். மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் பழைய மாணவர்கள் பெரும்பாலானோர் கட் ஆஃப் மதிப்பெண்களில் முன்னிலையில் உள்ளனர். இதனால் கவுன்சலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசுஒதுக்கீட்டு இடங்களில் பழைய மாணவர்களுக்கு இடம் கிடைக்க அதிக அளவு வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று விண்ணப்பித்த மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது.

17 வயது பூர்த்தியாகாததால் நிராகரிப்பு: 

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவப் படிப்பில் சேருவதற்கு டிசம்பர் 31-ம் தேதியுடன் 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த 17 வயது பூர்த்தியாகாத மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அவர்களுக்கு 17 வயது பூர்த்தியாக சில நாட்கள், வாரம்மற்றும் மாதம் இருந்தது. ஆனாலும் 17 வயது பூர்த்தியாகாததால் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டோம். இதேபோல சாதி சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் இல்லாத மாணவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அந்த மாணவர்கள் இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு எம்பிபிஎஸ் கிடைக்காமல் பிடிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களும் தற்போது விண்ணப்பித்துள்ளனர். தற்போது வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் கட் ஆஃப் 196 வரை சுமார் 520 பழைய மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் அல்லது தனியார்மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் இடங்கள் கிடைக்க வாய்ப் புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன