Skip to main content

இன்ஜி., விண்ணப்பதாரர்களுக்கு 'ரேண்டம்' எண் வெளியீடு: 30 விநாடிகளில் தயாரானது


அண்ணா பல்கலையில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பித்த, 1.54 லட்சம் மாணவர்களுக்கு, நேற்று, 30 வினாடிகளில், 'ரேண்டம்' எண் என, அழைக்கப்படும், சமவாய்ப்பு எண் வெளியிடப் பட்டது.தானியங்கி முறையில்அண்ணா பல்கலையில், நேற்று காலை 10:
00 மணிக்கு, உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா தலைமையில், பல்கலை துணைவேந்தர் ராஜாராம், பதிவாளர் கணேசன் முன்னிலையில், 'ரேண்டம்' எண் உருவாக்குதலை, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் மேற்கொண்டார்.சிறப்பு, 'சாப்ட்வேர்' மூலம், 30 வினாடிகளில் அனைத்து விண்ணப்பங்களுக்கும் எண்கள் உருவாக்கப்பட்டன;
எந்த விண்ணப்பத்துக்கு எந்த, 'ரேண்டம்' எண் என, தானியங்கி முறையில், பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து, ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது, ''மாணவர்கள் தங்களின், 'ரேண்டம்' எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்; தேவைப்பட்டால், கவுன்சிலிங்கின் போது பயன்படுத்தப்படும்,'' என்றார்.

யாருக்கு முன்னுரிமை
இரு மாணவர்கள் ஒரே, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றிருந்தால், அவர்களில் யாருக்கு முன்னுரிமை என்று முடிவு செய்ய, கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் நான்காம் பாடங்களின் மதிப்பெண் வரிசையாக ஒப்பிடப்படும். எந்த பாடத்திலாவது வித்தியாசம் இருந்தால், அதிக மதிப்பெண் பெற்றவர் முன்னுரிமை பெறுவார்.அதிலும் சமம் என்றால், பிறந்த தேதியில் மூத்தவருக்கு முன்னுரிமை கிடைக்கும். அதன்பின்னும் சமம் என்றால், 'ரேண்டம்' எண்ணில், அதிக எண் கொண்டவருக்கு முன்னுரிமை கிடைக்கும்.


46 ஆயிரம் இடங்கள் காலி


அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் மூலம் நிரப்ப, இதுவரை, 2 லட்சத்து, 658 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், 1.78 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீடு; 21,741 இடங்கள், கல்லூரிகளால் கூடுதலாக தரப்பட்டவை. இந்த எண்ணிக்கையின் படி பார்த்தால், 'ரேண்டம்' எண் வெளியிட்ட நேற்றே, 46 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அண்ணா பல்கலை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அனைவருக்கும் எளிதாக இடம் கிடைக்கும் என்றாலும், தேவையான பாடப்பிரிவு; தேவையான கல்லூரியில் இடம் கிடைப்பது தான் சிரமம். அதற்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அதிகம் இருக்க வேண்டும்' என்றனர்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்