Skip to main content

பாரதியார் பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: மறு மதிப்பீடுக்கு 29-க்குள் விண்ணப்பிக்கலாம்



  பாரதியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதையடுத்து, மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு ஜூன் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பாரதியார் பல்கலைக்கழகம், அதன்
உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஏப்ரல்-மே பருவத்துக்கான பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப் படிப்புகளின் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என துணைவேந்தர் ஜி.ஜேம்ஸ் பிச்சை தெரிவித்துள்ளார்.


அதேபோல், சிறப்புத் துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடத்தப்படும் எனவும், இதற்குத் தகுதியுள்ள மாணவர்கள் ஜூலை 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சி.ஆர்.கிளாடிஸ் லீமாரோஸ் தெரிவித்துள்ளார். 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்