Skip to main content

25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தம்

25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தம் : மத்திய அரசு நிதி ஒதுக்காததால் தமிழக அரசு முடிவு
மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்காததால், 25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் சுயநிதி பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஏழை மாணவர்களை சேர்ப்பது இந்த கல்வியாண்டு
முதல் நிறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி, ஏழை மாணவர்களை 25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவசமாக சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அதன்படி 2013--14, 2014--15ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி., 1ம்வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் அம்மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இவர்களுக்கான கல்விக்கட்டணத்தை மத்திய அரசு முழுமையாக வழங்காததால் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தமிழக அரசு அதற்கான நிதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்த கல்வியாண்டு முதல் இத்திட்டத்தில் ஆறாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையை மட்டும் நிறுத்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“கடந்த இரு கல்வியாண்டுகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களை சேர்த்த பள்ளிகளுக்கு அதற்கான கல்விக்கட்டணம் முழுமையாக வழங்கப்படவில்லை. இதை தவிர்க்க இந்த கல்வியாண்டு முதல் பள்ளி ஆரம்ப நிலை வகுப்புகளில் அதாவது எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில் மட்டுமே மாணவர்களை சேர்க்க அரசு உத்தரவிட்டது. ஆறாம் வகுப்பில் மாணவர்கள் சேர்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அவ்வகுப்பில் சேர்க்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படும். ஆரம்ப நிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாவதற்காக நவம்பர் வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது,” என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்