Skip to main content

பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வினா-விடை சிடி தயாரிப்பு

சென்னை பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வினா-விடை சிடி தயாரிப்பு: மேயர் 29–ந் தேதி வெளியிடுகிறார்.
மாணவர்கள் உயர்கல்வி பயில 10 மற்றும் பிளஸ் – 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பது இன்றியமையாததாகும். அதன்படி 10 மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வை எதிர் கொள்ளும்
மாணவ – மாணவிகள் கூடுதல் மதிப்பெண் வாங்குவதற்காக பல்வேறு வினா – விடை பயிற்சி கையேடுகளை வாங்குவார்கள். தற்போது அண்ணா நகரில் உள்ள ராங்கி மார்ஸ் நிறுவனத்தார் பிளஸ் – 2 மற்றும் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறும் வகையில் வினா – விடைகளை சி.டியாக தயாரித்து உள்ளார்கள்.


10–ம் வகுப்பு மாணவர்களுக்கான இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கும் 10–ம் வகுப்பு சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கும் உரிய வினா – விடைகள் எளிதில் புரியும் வண்ணம் சி.டியாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இது போல் 12–ம் வகுப்புக்கான இயற்பியல், வேதியில், தாவரவியல், உயிரியல் பாடங்களின் வினா – விடைகள் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சி.டிக்களாக தயாரிக்கப்பட்டு உள்ளது. ராங்கி மார்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த சிடி வெளியீட்டு விழா வருகிற 29–ந் தேதி காலை 6 மணிக்கு அண்ணாநகரில் நடக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு வினா – விடை சிடியை வெளியிடுகிறார். இது குறித்து அண்ணாநகர் ராங்கி மார்ஸ் சிறப்பு பயிற்சி மற்றும் ஹைடெக் அகாடமியின் மானேஜிங் டைரக்டர் சிவபிரகாசம் கூறுகையில், 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிதில் புரியும் வகையில் வினா – விடைகளை சிடியாக உருவாக்கி உள்ளோம். தகுதி, அனுபவம் மிக்க ஆசிரியர்கள் குழுவால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிடியை பயன்படுத்தும் மாணவர்கள் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது உறுதி என்று கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா