Skip to main content

பிளஸ் 1 வகுப்புகள் இன்று துவக்கம்


கோடை விடுமுறை மற்றும் 10 வகுப்பு தேர்ச்சி முடிவுகளுக்குப் பின், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு இன்று துவங்குகிறது.தமிழகத்தில், கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்., 10ம் தேதி முடிந்தது; இதன் முடிவுகள், மே
21ம் தேதி வெளியாகின. இம்முறை, அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியலில், 'சென்டம்' எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது; அதேபோல், மாநிலத்தில் முதல் மூன்று, 'ரேங்க்' பட்டியலில், 773 பேர் இடம் பெற்றனர்.

இதையடுத்து, ஜூன் 1 முதல், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது. இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில் மாநில, 'ரேங்க்' பட்டியலில், 'காமர்ஸ்' மாணவர்கள் முக்கிய இடம் பிடித்ததால், பிளஸ் 1 புதிய மாணவர் சேர்க்கையில், 'காமர்ஸ்' பிரிவுக்கு அதிக போட்டி ஏற்பட்டது. 


தற்போது, மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், அனைத்து பள்ளி களிலும், மாணவர்களுக்கு, இன்று பிளஸ் 1 வகுப்புகள் துவங்குகின்றன. அதிக தேர்ச்சிஇந்த ஆண்டு அரசு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகளில், பிளஸ் 2 போல் முக்கியத்துவம் கொடுத்து, பாடம் நடத்த வேண்டும் என்றும், பிளஸ் 2 வகுப்பில் அதிக தேர்ச்சிக்கு, பிளஸ் 1 வகுப்பிலேயே அடித்தளமிட வேண்டும் என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் 
கண்ணப்பன், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2