Skip to main content

தனியார் பள்ளிகளில் 19 குழுக்கள் மூலம் ஆய்வு பணி

தனியார் பள்ளிகளில் 19 குழுக்கள் மூலம் ஆய்வு பணி! 4 நாட்களில் ஆய்வறிக்கை அளிக்க முடிவு
தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு குறித்து குழுவினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு தனியார் பள்ளிகள், 25
சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான கல்வி கட்டணத்தை, அரசே வழங்கும் என்று இரண்டு ஆண்டுக்கு முன், தமிழக அரசு அறிவித்தது.ஆனால், அரசு கல்வி கட்டணத்தை முறையாக வழங்கவில்லை. பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, நிலுவை தொகை வைத்துள்ளது என்று கூறி, இந்தாண்டு முதல் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவ, மாணவியரை சேர்க்க மாட்டோம், என்று, தனியார் பள்ளிகள் கூட்டாக அறிவித்தது.இந்நிலையில், கல்வி கட்டண தொகையை வழங்க அரசு முன் வந்தது.
முன்னதாக, மாவட்டந்தோறும், இடஒதுக்கீடு முறையில் சேர்ந்த மாணவ, மாணவியரின் கல்வி தரத்தை அறிய, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாணவ, மாணவியர் தொடர்ந்து கல்வி பயில்கின்றனரா? கல்வி கட்டண நிலுவையால், தனியார் பள்ளிகள் மாணவ, மாணவியரை நிறுத்தி வைத்துள்ளனரா? அல்லது தானாகவே முன் வந்து டி.சி.,யை வாங்கி கொண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்து படிக்க நிர்பந்தபடுத்தினர்களா? என்பது குறித்த புகார் எழுந்துள்ளது.

மேலும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்தவர்கள் என்பதால், நடைமுறையில் கல்வி கற்க, ஏதேனும் சிக்கல் உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்து, கல்வி கற்கும் மாணவ, மாணவியரின் நிலை குறித்த விவர அறிக்கையை சேகரிக்குமாறு, பள்ளி கல்வித்துறை மூலம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இடஒதுக்கீடு அடிப்படையில், தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவ, மாணவியர் குறித்த தகவல், எவ்வாறு சேகரிக்க வேண்டும் என்பது குறித்து, 15ம் தேதி முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழுவில் இடம் பெற்று உள்ளவர்களுக்கு, கூட்டம் நடந்தது. இக்குழுவினர், நேற்று ஆய்வு பணியை துவக்கினர்.

ஈரோடு சி.இ.ஓ., அய்யண்ணன் கூறியதாவது: ஒரு குழுவில் உதவி தொடக்க கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், வட்டார வள மைய அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் என நால்வர் உள்ளனர். 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆய்வை இன்று (நேற்று) துவக்கினர்.வரும், 19ம் தேதிக்குள் ஆய்வை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பயிலும் மாணவ, மாணவியரின் நிலை குறித்து ஆராயப்படும். அவர்கள் தொடர்ந்து அதே பள்ளியில் படிக்கின்றனரா? வேறு பள்ளிக்கு சென்று விட்டனரா? பள்ளியை மாற்றி கொள்ள உத்தேசித்து உள்ளனரா? என்பது குறித்து ஆராயப்படும்.குழுவின் ஆய்வறிக்கையை பெற்றவுடன், இறுதி அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில், கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு, அரசு விரைந்து வழங்கும், என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா