Skip to main content

அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி.


அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகாபயிற்சி மேற்கொள்ள வேண்டும்' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகஅரசு பள்ளிகளில் 2014 முதல் யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இந்தப் பயிற்சி பல பள்ளிகளில் நடத்தப்படுவதில்
லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து யோகா மற்றும் தியான பயிற்சியை தினமும் கட்டாயம் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:கடந்த 2014 அக்டோபரில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி பள்ளிகளில் மதிய உணவு இடைவேளைக்கு 30 நிமிடங்கள் முன் யோகா பயிற்சியை தினமும் கடைபிடிக்க வேண்டும்; இந்த பயிற்சியை உடற்கல்வி ஆசிரியர்கள் வழங்கவேண்டும்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 நிமிடம் யோகா; 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை 15 நிமிடம் யோகா; 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 15 நிமிடங்கள் யோகா ஐந்து நிமிடங்கள் தியானம் பயிற்சி அளிக்க வேண்டும்.தியான பயிற்சியை காலையில் வகுப்பறையில் நடக்கும் இறை வழிபாட்டில் நடத்த வேண்டும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

TN school lab Assistant Official Notification for Chennai

TN school lab Assistant Official Notification for Chennai

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன