Skip to main content

இந்த கல்வியாண்டு முதல் அறிவியல் புத்தகத்தில் மாற்றம்

தமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இதனால் மாணவர்கள்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று வருகிறார்கள். நடப்பு கல்வியாண்டில் (2015-2016) 10ம் வகுப்பு
படிக்கும் மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப்புத்தகங்களை வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில்,
அனைத்து பள்ளிகளுக்கும், பத்தாம் வகுப்பு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாடத்தில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அறிவியல் புத்தகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல்வினாக்கள் பகுதியில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்தின் கடைசியிலும், பயிற்சி வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். பொதுத்தேர்வில், இவற்றிலிருந்தே பெரும்பாலும் கேள்விகள் கேட்கப்படும். அதனால் இந்த ஆண்டு முதல் பாடத்தின் கடைசியாக இடம் பெறும் வினாக்கள் பகுதியில் கூடுதலாக கேள்விகள் கேட்கப்பட்டு அறிவியல் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அறிவியல் பட்டதாரி ஆசிரியரிடம் கேட்டபோது, ‘கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு இரு மடங்கு, ‘புக் பேக்’ வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும், ஐந்து மதிப்பெண் வினா, 25ல் இருந்து, 108 ஆக உயர்த்தப்பட்டுள்ளது’ என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்