Skip to main content

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற நாளை கடைசி


தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை (மே 28) கடைசி நாளாகும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 29-ஆம் தேதி
மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குச் சென்று சேர வேண்டும்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து மே 11-ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன

.
நாளை கடைசி: விண்ணப்பங்களைப் பெறுவதற்கு மே 28-ஆம் தேதி கடைசி நாளாகும். சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org -இல் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். 

மாணவர்கள் தாங்கள் அனுப்பிய விண்ணப்பம் சென்று சேர்ந்ததா என்பதை உறுதி கொள்வதற்கான இணைப்பு (link) சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மொத்தம் 590 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நிறைவு செய்யப்பட்ட 17,843 விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குச் சென்று சேர்ந்துள்ளன என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்