Skip to main content

வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது: ஆசிரியர்களுக்கு இயக்குநர் உத்தரவு

வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
கோடை விடுமுறை முடிவடைந்து வகுப்புகள் ஜூன் 1-ம் தேதி திறக் கப்பட உள்ளன. இந்த நிலையில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரிய
ர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

* பள்ளி தொடங்கும் நாள் அன்றே அனைத்து விலையில்லா பொருட்களையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். முதல் நாளிலே ஆசிரியர்களுக்கான கால அட்ட வணை கொடுத்திருக்க வேண்டும்.

* ஆசிரியர்கள் வகுப்பு தொடங்கு வதற்கு முன்னதாகவே வந்திருந்து மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். காலதாமதமாக வரு வதை முற்றிலும் தவிர்க்க வேண் டும். தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்து குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மைதான வசதி சரியாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.


* எக்காரணம் கொண்டும் ஆசி ரியர்கள் வகுப்பறையில் செல் போன் பயன்படுத்தக் கூடாது. தலைமை ஆசிரியர்கள் இதை கண்காணிக்க வேண்டும்.

* ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களுக்கு ஒழுக்கம், நற்பண்புகள் உள்ளிட்ட நல்ல கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும்.

* 6 முதல் 8-ம்வகுப்பு வரை யுள்ள மாணவர்களுக்கு தினமும் தமிழ் மற்றும் ஆங்கில மொழி வாசிப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

* மாணவர் சேர்க்கையை அதி கரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், பள்ளிகளில் ஆங்கிலப்பிரிவுகள் தொடங்கலாம். மாணவர்களின் வருகையை ஆசிரியர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும்.

* மாணவர்களுக்கு வழங்கப் படும் சத்துணவு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி