Skip to main content

4 நகராட்சி பள்ளிகள், 26 அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம்


காஞ்சிபுரம் நகரப் பகுதியில், நகராட்சி நிதி உதவியுடன் நகராட்சி நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், கழிப்பறை மற்றும் சத்துணவு மைய கட்டி
டம் இல்லாத பள்ளிகளை தேர்வு செய்து, அப்பள்ளிகளில் கட்டிடங்கள் அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, கழிப்பறை கட்டிடம் அமைக்க 4 பள்ளிகளும், சத்துணவு மைய கட்டிடம்,சமையலறை கட்டிடம் அமைக்க தலா ஒரு பள்ளியும் தேர்வு செய்யப் பட்டுள்ளன. மேலும், பராமரிப்பு பணிகள் மற்றும் சுற்று சுவர் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள 20 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகளுக்காக 4 அங்கன்வாடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில், நகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ.1.88 கோடி செலவில் மேற்கூறிய பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நகர மன்ற ஒப்புதல் பெற்ற பிறகு விரைவில் பணிகள் தொடங்கும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.சூரியஒளி மின்சாரத்தின் மூலம் நகராட்சி பள்ளிகளின் மின் தேவையை பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற் கட்டமாக நகராட்சி கட்டுப் பாட்டில்உள்ள 4 பள்ளிகளில் சோலார் போர்டு அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. 
இதற்காக, இராணி அண்ணாதுரை மேல் நிலைப்பள்ளி, சிஎஸ்எம் நடுநிலைப் பள்ளி, ஒலிமுகம்மது பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி, ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்