Skip to main content

2,172 இடங்களுக்கு31,000 பேர் போட்டி:மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., ஆர்வம்


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர 31,332 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 3,279 விண்ணப்பங்கள் அதிகம்.தமிழகத்தில் 19 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு
அரசு பல் மருத்துவ கல்லுாரிகளும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக மாநிலத்திற்கு 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, 500 இடங்கள் வரை மாநிலத்திற்கு கிடைக்கும்.

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். மொத்தம், 35,667 பேர் விண்ணப்பங்கள் பெற்றிருந்தனர். இதில், 31,332 பேரின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு 30,380 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு 28,053 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஆண்டை விட 3,279 விண்ணப்பங்கள் அதிகம்.மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறுகையில், ''தபாலில் அனுப்பிய விண்ணப்பங்கள், தாமதமாக நாளை (இன்று) கிடைக்க வாய்ப்புள்ளது. அதை சேர்க்க ஆலோசித்து வருகிறோம். கடந்த ஆண்டை விட கூடுதல் இடங்கள் கிடைக்குமா என்பது கலந்தாய்வின் போது தான் தெரிய வரும்,'' என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்