Skip to main content

தமிழ்நாட்டில் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திட்டமிட்டபடி திறப்பு; தினத்தந்தி

தமிழ்நாட்டில் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திட்டமிட்டபடி திறப்பு; பள்ளிக்கல்வித்துறை தகவல்-தினத்தந்தி
தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1-ந்தேதி திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

வெயிலின் தாக்கம்

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்
பட்டுள்ளது. வருகிற ஜூன் 1-ந்தேதி கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் தொடங்கி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.

பெரியவர்களாலேயே இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியவில்லை. இந்த வெயிலுக்கு பயந்து சிலர் பிற்பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.


முற்றுப்புள்ளி

கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயிலின் கோரத்தாண்டவம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது பிற மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து தான் காணப்படுகின்றது.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் இந்தியா முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

இந்த வெயிலினால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக புதுச்சேரியில் ஜூன் 1-ந்தேதிக்கு பதிலாக, ஜூன் 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகத்திலும் பள்ளிகள் ஜூன் 1-ந்தேதிக்கு பதிலாக மாற்று தேதியில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருக்கலாம் என்று சில தகவல்கள் கடந்த சில நாட்களாக பரவி வந்தன.

ஆனால் அவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திட்டமிட்டபடி ஜூன் 1-ந்தேதி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

திட்டமிட்டபடி திறப்பு

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தை முன்வைத்து பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படும், மாற்று தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திட்டமிட்டபடி ஜூன் 1-ந்தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் அதே நாளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா