Skip to main content

எந்த கொலஸ்ட்ரால் நல்லது? எந்த கொலஸ்ட்ரால் கெட்டது?

கொலஸ்ட்ராலில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நல்லது, இன்னொன்று கெட்டது. இந்த கொலஸ்ட்ரால் வேறுபாட்டை எப்படி அறிவது?

ரத்தக் கொழுப்புகள் அல்லது கொழுப்பு நிறைந்த பொருட்களில் (லிப்பிட்ஸ்) கொலஸ்ட்ரால், டிரைகிளசரைடுகள் உள்ளன. உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் தேவைப்ப
டுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக கொழுப்பு உடலில் சேரும்போது (ஹைப்பர்லிபிடீமியா நிலை), அவை ரத்த நாளங்களில் படிகின்றன. இந்தக் கொழுப்புப் படிவுகள் மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு (ஸ்டிரோக்) ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன.

`நல்ல’ - `கெட்ட’ கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரையாது; அதனால், அதை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதற்கு புரதம் தேவைப்படுகிறது. இவை `சுமக்கும்’ லிபோ புரோட்டீன் என்று அழைக்கப்படுகின்றன. இதில் இரண்டு முதன்மையான வகைகள் உள்ளன.

அதிக அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (ஹை டென்சிடி லிபோபுரோட்டீன் ஹெச்.டி.எல்.): அதிக அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீனால் கொலஸ்ட்ரால் சுமந்து செல்லப்பட்டால், அது `நல்ல’ கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு வரும் ஆபத்தை இந்த வகைக் கொலஸ்ட்ரால் குறைக்கிறது.

குறைந்த அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (லோ டென்சிடி லிபோபுரோட்டீன் எல்.டி.எல்.): குறைந்த அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீனால் கொலஸ்ட்ரால் சுமந்து செல்லப்பட்டால், அது `கெட்ட’ கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு ஏற்படும் ஆபத்தை இந்த வகை கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.

ரத்த மிகைக் கொழுப்பு ஏன்?

பல குடும்பங்களில் ரத்த மிகைக் கொழுப்பு காணப்படலாம். ஆனால், பெரும்பாலும் ரத்த மிகைக் கொழுப்புக்குக் காரணம், ஆரோக்கியமற்ற உணவும் உடலியக்கச் செயல்பாடு இல்லாமையுமே. அறிகுறிகளையோ எச்சரிக்கை சமிக்ஞைகளையோ ரத்த மிகைக் கொழுப்பு அரிதாகவே வெளிப்படுத்துகிறது.

ரத்தக் கொழுப்பு உடலில் மிக அதிகமாக இருக்கும்போது, தோலில் ஜான்தோமா எனப்படும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். இவை பொதுவாகக் குமிழி போல இருக்கும். சாதாரண ரத்தப் பரிசோதனையை செய்துகொள்வதன் மூலம், ரத்தக் கொழுப்பின் அளவை அறிந்துகொள்ளலாம்.

சிலவேளை ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு போன்ற கண்டறியப்படாத மருத்துவ நிலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

ரத்த மிகைக் கொழுப்பு இருந்தால்?

ஆரோக்கியமாக உண்ணுங்கள். அவற்றில் பழங்கள், காய்கள் போன்றவை அதிகமாக இருக்க வேண்டும். கொழுப்புச் சத்து குறைந்த மாமிசம், நிறைவுற்ற கொழுப்பு, கொலஸ்ட்ரால் போன்றவற்றை குறைந்த அளவு உண்ணலாம்.

ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரியுங்கள்.

சுறுசுறுப்பாக இருங்கள்.

மேற்கண்ட செயல்பாடுகள் மூலம் உங்களுக்கு உள்ள ரத்த மிகைக் கொழுப்பின் அளவு குறையவில்லை என்றால், மருத்துவர் சில மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

வெளிப்படையாக மாற்றங்கள் தெரியாவிட்டாலும் மருத்துவர் தரும் மருந்துகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடியுங்கள்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு